ஊதிய உயர்வு, உள்ளிட்ட நிபந்தனைகளை வலியுறுத்தி பிரான்சில் விமான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாரீஸ் விமான நிலையம் முடங்கியது.
6 ஆண்டுகள் சம்பள உயர்வு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
கொரோனாவுக்கு பின்னர் சர்வதேச பயணங்கள் சகஜ நிலை திரும்பியுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என ஊழியர்கள் கோஷம் எழுப்பினர்.