கடலுக்குள் மூழ்கிய சீன கப்பல்: ஹாங்காங்கை தாக்கிய பயங்கர புயல்: உறைய வைக்கும் காட்சிகள்!


சீனாவின் ஹாங்காங்கில் கடல் பகுதியை கடந்து சென்ற சாபா வெப்பமண்டல புயலால் கடலில் 30 பேருடன் சென்று கொண்டு இருந்த சீன பொறியியல் கப்பல் இரண்டு டஜன் பணியாளர்களுடன் கடலில் முழ்கியுள்ளது.

சனிக்கிழமை தென் சீனக் கடல் பகுதியில், சாபா புயல் காற்று அபாயகரமான நிலைமைகளை கட்டு அவிழ்த்து விட்டு இருப்பதை தொடர்ந்து, உள்ளுர் நேரப்படி 5:30 ஹாங்காங் நகரத்தின் தென் மேற்கு பகுதியில் 300 கிமீ (200 மைல்) தொலைவில் பயணித்த பொறியல் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

இதில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்த நிலையில், அவற்றில் இருந்து மூன்று பணியாளர்கள் மட்டுமே மீட்பு குழுவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்,

மேலும் டஜன் கணக்கான பணியாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஹாங்காங் அரசின் விமான மீட்பு குழு தெரிவித்துள்ளது.

ஆனால் கடுமையான வானிலை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சாபா புயல் சீனாவின் பல பகுதியில் கடுமையான மழை மற்றும் காற்றைக் கொண்டுவந்ததுடன், பொது போக்குவரத்தில் இடையூறுகளை ஏற்படுத்தி, பல வணிகங்களை மூடுவதற்கு கட்டாயப்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் புயல் எச்சரிக்கை எண் 3க்கு சமிக்கை செய்த வானிலை முன்னறிவிப்பாளர்கள், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் சான்ஜியாங் அருகே சாபா புயல் நிலச்சரிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவுடன் கைகோர்க்கும் ஈரான்: மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான புதிய ஒப்பந்தம்

பிரிட்டனில் இருந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட விழாவை தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் வியாழக்கிழமை ஹாங்காங்கில் புயல் எச்சரிக்கையை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

கடலுக்குள் மூழ்கிய சீன கப்பல்: ஹாங்காங்கை தாக்கிய பயங்கர புயல்: உறைய வைக்கும் காட்சிகள்! | Chaba Storm Hits Hong Kongover2 Doz Crew Missing



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.