அமெரிக்காவில் ஒரு நபர் தூங்கும் கனவில் கண்ட எண்களைப் பயன்படுத்தி லொட்டரி சீட்டை வாங்கி கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் ஜாக்பாட்டை வென்றுள்ளார்.
வர்ஜீனியாவைச் சேர்ந்த அலோன்சோ கோல்மேன் (Alonzo Coleman), ஒரு கார்னர் மார்ட்டில் இருந்து லொட்டரி சீட்டை வாங்கினார். அவர் வெறும் 2 அமெரிக்க டொலருக்கு தான் அந்த லொட்டரி சீட்டை வாங்கினார்.
ஆனால், அதன்மூலம் கால் மில்லியன் டொலர்களை (250,000 டொலர்) வென்றுள்ளார். மிகவும் ஆச்சரியப்பட்ட அலோன்சோ இதனை நம்புவது கடினமாக இருந்தது என்று கூறினார்.
ஜூன் 11 அன்று கோல்மேன் தொலைக்காட்சியில் டிராவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவருடைய சீட்டில் எண் வரிசை – 13, 14, 15, 16, 17 மற்றும் 18 – பொருத்தமாக இருப்பதைக் கண்டார். போனஸ் எண் 19 இருந்தது ஆனால் முதல் ஆறு எண்கள் அவருக்கு பெரும் தொகையை வெல்ல உதவியது.
2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!
லொட்டரியின் முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
தனது வயதைக் குறிப்பிடாத ஓய்வு பெற்ற நபரான கோல்மேன், லாட்டரி அதிகாரிகளிடம் வெற்றிபெற்ற வரிசை எண்களை முன்பே தனது கனவில் கண்டதாகக் கூறினார்.
வர்ஜீனியா லாட்டரி, 250,000 அமெரிக்க டொலர் (இலங்கை பண மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 9 கொடி) மதிப்பிலான காசோலையுடன் மற்றும் “நான் ஒரு எரிச்சலான முதியவர்” டி-ஷர்ட்டுடன் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுக்கும் கோல்மனின் புகைப்படத்தை வெளியிட்டது.
உக்ரைன் தலைநகரில் தோன்றிய விசித்திர மேகம்! வேற்றுகிரக வாசிகளின் வருகையா? ஆச்சரியத்தில் மக்கள்