கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை வீடு : மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ்

சென்னையில் கோயம்பேடு மேம்பால பணிகள் நடந்தபோது அங்கிருந்த விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் சிலபகுதி இடிக்கப்பட்டது. முக்கிய லேண்ட் மார்க்காக இருந்த அவரது மண்டபம் தற்போது தேமுதிக அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது அதேபோன்று மெட்ரோ ரெயில் பணிகளுக்காக கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் 170 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவது குறித்து மெட்ரோ நிறுவனம் சார்பில் கமலுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.

சென்னையில் 61 ஆயிரம் கோடி செலவில் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்த வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பாதை ஆழ்வார்பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக அப்பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. இது தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிக்கு இந்த இடத்தில் இருந்து 8-10 அடி இடத்தை தங்களுக்கு வழங்கும்படி மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.