குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள 30 யானைகளுக்கு, ஒரு மாத புத்துணர்வு முகாம் நேற்று துவங்கியது.
கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் ஜூலையில் ‘ஜீவதானம்’ என்ற பெயரில், புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு முகாம், புன்னத்தூர் கோட்டை பகவதி கோயில் வளாகத்தில் நேற்று துவங்கியது. இதை, தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் துவக்கி வைத்து, யானைகளுக்கு மூலிகை உணவு வழங்கினார்.
ஒரு மாதம் நடக்கும் முகாமில், அரிசி, பயறு, கொள்ளு, அஷ்டசூரணம், சவனப்பிராசம், மஞ்சள், உப்பு மற்று நவதானியங்கள் கலந்த உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, தேவஸ்தானம் சார்பில் 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள 30 யானைகளுக்கு, ஒரு மாத புத்துணர்வு முகாம் நேற்று துவங்கியது.கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.