இந்தியாவில் இன்சூரன்ஸ் பாலிசி வாங்க விரும்புவோர்கள் விருப்பப்பட்டுத் தேர்வு செய்யும் நிறுவனமாக எல்ஐசி உள்ளது.
அதிலும் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பும் பலர் பிக்சட் டெபாசிட், அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கு அடுத்தாக அதிகம் விரும்பி செய்யும் முதலீடாக ஆயுள் காப்பீடு திட்டங்கள் உள்ளன.
எல்ஐசி பாலிசிகளை தனிநபருக்காக, குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக எல்லாம் வாங்கலாம். தங்களது பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்துக்காகச் சேமிக்க விரும்புபவர்களுக்காக எல்ஐசியில் ஜீவன் தருண் என்ற காப்பீடு திட்டம் உள்ளது.
வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சோமேட்டோ..!
ஜீவன் தருண் திட்டம்
ஜீவன் தருண் திட்டத்தில் குழந்தைகள் பிறந்த 90 நாள் முதல் 12 வயதுக்குள் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகளின் வயது 20 ஆகும் வரை முதலீடு செய்யலாம். பிள்ளைகளின் வயது 25 ஆகும் போது பாலிசி முதீர்வடையும்.
உறுதித் தொகை
ஜீவன் தருண் திட்டத்தில் குறைந்தபட்ச உறுதி தொகை 75,000 ரூபாயிலிருந்து முதலீட்டைத் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு என்று ஏதுமில்லை.
பிரீமியம்
உங்கள் குழந்தைகளின் வயது 12 ஆகும் போது முதலீட்டை செய்ய தொடங்கினால் 13 வருடங்களுக்கு பிறகு முதீர்வடையும். இந்த பாலிசியில் தினமும் 150 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்திற்கு 55,000 ரூபாய் பிரீமியாமாக செலுத்த வேண்டும்.
முதீர்வு
இப்படி 8 வருடங்கள் என 20 வயது வரை 4,40,665 ரூபாய் வரை தொடர்ந்து முதலீடு செய்த பிறகு, 25 அயது ஆகும் போது பாலிசி முதீர்வடையும்.
லாபம் எவ்வளவு?
பாலிசி முதிர்வடையும் போது போனஸ் 2,47,000 ரூபாயும், குறைந்தபட்ச உறுதித் தொகை 5 லட்சமும், லாயல்ட்டி நன்மையாக 97,500 ரூபாய் என மொத்தமாக 8,44,500 ரூபாய் திரும்பக் கிடைக்கும். 4,03,835 ரூபாய் முதலீட்டின் லாபமாக கிடைக்கும்.
இடையில் பணம் தேவைப்பட்டால்
இந்த பாலிசியில் முதலீடு செய்யும் போது கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 5, 10, 15 சதவீத தொகையை இடையில் பெறவும் முடியும்.
எல்ஐசி
எல்ஐசி பங்குகள் ஐபிஓவில் வெளியிட்டத்தில் இருந்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீட்டாளர்களுக்கு நட்டத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
LIC Jeevan Tarun Policy For Children: Invest Rs 150 Daily and Get Rs 8.5 Lakh Returns
LIC Jeevan Tarun Policy For Children: Invest Rs 150 Daily and Get Rs 8.5 Lakh Returns | தினமும் ரூ.150 முதலீடு செய்து 8.5 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி?