அசத்தும் மணத்திலும், அதன் பச்சை நிறத்திலும் நம்மை கவரும் ஒன்றுதான் கொத்தமல்லி. சாம்பார் முதல் சாலட் வரை கொத்தமல்லி வைத்தான் நாம் தாலிப்போம். எல்லா உணவுகளில் நாம் கொத்த மல்லி தூவித்தான் தயார் செய்வோம். ஆனால் நம்மில் பலர் கொத்தமல்லியை தண்டிலிருந்து நீக்குவதை ஒரு கஷ்டமான காரியமாக பார்ப்போம்.
இந்நிலையில் கொத்தமல்லியை மிக எளிதாக அதன் தண்டுபகுதியிலிருந்து எடுப்பது எப்படி என்று இன்ஸ்டிராகிராமில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இதற்கு 147 மில்லியன் வியூஸ் மற்றும் 4.5 மில்லியன் லைக்குகள் வந்துள்ளது.
இந்த வீடியோவில் வரும் நபர், பரு பிளாஸ்டிக் பாஸ்கட்டின் ஓட்டையில், கொத்தமல்லியை வைக்கிறார். வெளிப்பிறத்திலிருந்து அந்த கொத்தமல்லியை இழிக்கிறார். நொடிப்பொழுதில் கொத்தமல்லி இலைகள், பிளாஸ்டிக் பாஸ்கட்டுக்குள் விழுகிறது. அடடே இது நமக்கு தெரியாமா போச்சே என்பதுதான் நமது ரியாக்ஷனாக இருக்கிறது.
மிகவும் சோம்பேரியாக இருப்பவரிடம் கடினமான வேலையை கொடுத்தால், எப்படியேனும் அதை சுலபமா செய்ய ஒரு வழியை கண்டுபிடித்துவிடுவார். இனி நீங்களும் கொத்தமல்லிய இப்படி எளிதாக தண்டிலிருந்து எடுத்துவிடலாம்.