ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொளுத்தும் வெயிலின் தகிப்பை சமாளிக்க சுற்றுலா பயணிகள் தண்ணீர் பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
35 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். டோக்கியோ புறநகர் பகுதிகளில் உள்ள தண்ணீர் பூங்காக்கள், நீச்சல் குளங்களில் தினந்தோறும் மக்கள் வருகை அதிகரித்து வருகிறது.