இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து வங்கிகள் பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கோடக் மகேந்திரா வங்கி ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
ஜூலை 1 முதல் புதிய வட்டி விகிதம் குறித்த தகவல்கள் கோடக் மகேந்திரா வங்கியின் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 50 புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதும் இதனால் பிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு லாபமும், வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நஷ்டமும் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
வட்டி விகிதம்
அந்த வகையில் ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாக இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியது என்பது தெரிந்ததே.
ஜூலை 1 முதல்
இந்த நிலையில் ஜூலை 1 முதல் கோடக் மகேந்திரா வங்கி பிக்சட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு புதிய வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து கோடக் மகேந்திரா வங்கி அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வட்டி விகிதம் குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.
பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்
7-14 நாட்கள் – 2.50% மூத்த குடிமக்கள் – 3.00%
15-30 நாட்கள் – 2.50% மூத்த குடிமக்கள் – 3.00%
31-45 நாட்கள் – 3.00% மூத்த குடிமக்கள் – 3.50%
46-90 நாட்கள் – 3.00% மூத்த குடிமக்கள் – 3.50%
91-120 நாட்கள் – 3.50% மூத்த குடிமக்கள் – 4.00%
121-179 நாட்கள் – 3.50% மூத்த குடிமக்கள் – 4.00%
180 நாட்கள் – 4.75 மூத்த குடிமக்கள் – 5.25%
181-269 நாட்கள் – 4.75 மூத்த குடிமக்கள் – 5.25%
270 நாட்கள் – 4.75 மூத்த குடிமக்கள் – 5.25%
364 நாட்கள் – 5.25% மூத்த குடிமக்கள் – 5.75%
365-389 நாட்கள் – 5.50% மூத்த குடிமக்கள் – 6.00%
390 நாட்கள் – 5.75% மூத்த குடிமக்கள் – 6.25%
391-23 மாதங்கள் – 5.75% மூத்த குடிமக்கள் – 6.25%
23 மாதங்கள் – 5.75% மூத்த குடிமக்கள் – 6.25%
2 வருடம் – 3 வருடம் 5.75% மூத்த குடிமக்கள் – 6.25%
3 வருடங்கள் – 4 வருடங்கள் – 5.90% மூத்த குடிமக்கள் – 6.40%
ரெக்கரிங் டெபாசிட் வட்டி விகிதம்
6 மாதங்கள் – 4.75% மூத்த குடிமக்கள் 5.25%
9 மாதங்கள் – 4.75% மூத்த குடிமக்கள் 5.25%
12 மாதங்கள் – 5.50% மூத்த குடிமக்கள் 6.00%
15 மாதங்கள் – 5.65% மூத்த குடிமக்கள் 6.15 %
18 மாதங்கள் – 5.65% மூத்த குடிமக்கள் 6.15 %
21 மாதங்கள் – 5.65% மூத்த குடிமக்கள் 6.15 %
24 மாதங்கள் – 5.75% மூத்த குடிமக்கள் 6.25%
27 மாதங்கள் – 5.75% மூத்த குடிமக்கள் 6.25%
30 மாதங்கள் – 5.75% மூத்த குடிமக்கள் 6.25%
33 மாதங்கள் – 5.75% மூத்த குடிமக்கள் 6.25%
3-4 வருடங்கள் – 5.90% மூத்த குடிமக்கள் 6.40%
4-5 வருடங்கள் – 5.90% மூத்த குடிமக்கள் 6.40%
5-10 வருடங்கள் – 5.90% மூத்த குடிமக்கள் 6.40%
Kotak Mahindra Bank Raises Fixed Deposit interest Rates.. Full details!
Kotak Mahindra Bank Raises Fixed Deposit interest Rates.. Full details! | கோடக் மகேந்திரா வங்கியின் பிக்சட் டெபாசிட் வட்டி: ஜூலை 1 முதல் இவ்வளவு உயர்வா?