‘சாணிக்காயிதம்’ இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
1930 க்கும் 40 க்கும் இடைப்பட்ட காலத்தில் மெட்ராஸ் ப்ரெசிடெண்சியில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு ஷ்ரேயஸ் கிருஷ்ணா, எடிட்டிங் நாகூரான், கலை இயக்குனர் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் தா ராமலிங்கம்.
Captain miller .. This is going to be so exciting. Super kicked to work with @ArunMatheswaran and my brother @gvprakash @SathyaJyothi pic.twitter.com/lS8OMSh4I9
— Dhanush (@dhanushkraja) July 2, 2022
பரதேசி படத்திற்கு தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி காஸ்டியூம் டிசைனராக பணியாற்றுகிறார் இவருடன் சேர்ந்து தனுஷுக்கான ஆடை வடிவமைப்பாளராக காவ்யா ஸ்ரீராம் பணியாற்ற உள்ளார்.