சேலத்தில் 100 முறை ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலத்தில், 12 தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில், ஈரடுக்கு மேம்பாலத்தில் ஏறும் இடம், இறங்கும் இடம் ஆகிய பகுதிகளில் தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், அதிவேகமாக செல்பவர்களின் வாகன எண்ணை தானியங்கி காமிரா பதிவு செய்து, விதியை மீறியதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு SMS அனுப்பி வைக்கும்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஆனால் பலர் ஹெல்மெட் அணிவதில்லை. நெரிசல் குறைவான பகுதி என்பதால். மேம்பாலத்தில் குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுகின்றனர்.
இந்நிலையில், தானியங்கி காமிரா மூலம் 119 முறை விதிமுறையை மீறி இரு சக்கர வாகனம் ஓட்டியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதில், பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் 100 முறைக்கு மேல் இரு சக்கர வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டும், அவர் அந்த அபராத தொகையை அரசுக்கு செலுத்தவில்லை.
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வரும் அவரை, பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் தற்போது இறங்கி உள்ளனர்.