தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது குறித்த புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்களின் விவரங்கள் குறித்து அந்தந்த பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்றும், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுளது.
சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 6-ம் தேதி இரவு 8 மணிக்குள் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.