மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திரவுபதி முர்மு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு பெயரை அறிவிப்பதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசனை நடத்தி இருந்தால், அவரை ஆதரிப்பது பற்றி பரிசீலித்து இருப்போம் என கூறினார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா முன்னிறுத்தப்பட்ட நிலையில், மம்தாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.