தெற்கு ஈரானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நில நடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 3-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 3 ஆக பதிவானதாகவும் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இடிபாடுகளில் சிக்கித் தவித்த 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், தொடர் மீட்பு பணி நடைபெறுகிறது. அதேநேரம் ஷார்ஜா, துபாய், அஜ்மன், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.