தெலங்கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் சென்று வரவேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்துக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் அவரை அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
ஆனால், முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமரை வரவேற்க செல்லவில்லை. வழக்கமாக ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வந்தால், அவரை மாநில முதல்வர் வரவேற்பது மரபு ஆகும். ஆனால் பிரதமரை சந்திரசேகர ராவ் வரவேற்க செல்லாததால் பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமரை வரவேற்பு சந்திரசேகர் ராவ் செல்லாதது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பல தவிர்த்து வந்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM