வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மூட்டு வலி சிகிச்சைக்கு, ஆயுர்வேத டாக்டர் ஒருவர், 40 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலித்தது வியப்பை ஏற்படுத்திஉள்ளது.ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
‘கால்சியம்’
இங்கு, ராஞ்சியில் வசிக்கும் தோனி, ‘கால்சியம்’ பற்றாக்குறை காரணமாக கடுமையான மூட்டு வலியில் அவதிப்பட்டு வருகிறார். இதற்கு சிகிச்சை பெற, ராஞ்சி அருகே லபுங் வனப்பகுதியில் உள்ள ஆயுர்வேத ஆசிரமத்திற்கு தோனி வந்தார். அவரது மூட்டு வலிக்கு சிகிச்சை அளித்த ஆயுர்வேத டாக்டர் வந்தன் சிங் கெர்வர், கட்டணமாக 40 ரூபாய் வசூலித்தார்.
இது குறித்து வந்தன் சிங் கெர்வர் கூறியதாவது:தோனியின் பெற்றோர் மூட்டு வலி சிகிச்சைக்கு என்னிடம் வருவது வழக்கம். அவர்களுக்கு மூட்டு வலி குறைந்ததை பார்த்த தோனி என்னை தேடி வந்துள்ளார். அவர் கிரிக்கெட் வீரர் தோனி என்பது எனக்கு தெரியாது. ஆலோசனைக்கு, 20 ரூபாய்; ஆயுர்வேத மருந்துகளுக்கு, 20 ரூபாய் என, 40 ரூபாய் கேட்டேன்.
‘செல்பி’
ூஅவர் சிரித்தபடி ஒரு தொகையை கொடுத்துச் சென்றார். அதன்பின் தான் அவர் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் என இங்குள்ளோர் தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.தோனி ஆயுர்வேத சிகிச்சைக்கு வந்ததை அறிந்ததும், அவர் காரை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தது. அவர்களுடன் தோனி ‘செல்பி’ எடுத்துக் கொண்டார்.
Advertisement