பயங்கரவாதிகளுக்கு உதவிய 5 பேருக்கு சிறை தண்டனை| Dinamalar

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வெடிகுண்டு தயாரிக்க பயங்கரவாதிகளுக்கு உதவிய ஐந்து பேருக்கு 3 – 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிஜ்னர் நகரில், 2014ல் ஒரு வீட்டில் குண்டு வெடித்தது. தடை செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து பயங்கரவாதிகள் தங்க இடம் கொடுத்து, வெடிபொருட்கள் வாங்க உதவிய, சிமி இயக்கத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி குற்றத்தை ஒப்புக் கொண்ட ஹஸ்னா, அப்துல்லா, ரயீஸ் அகமது, நதீம், பர்கான் ஆகியோருக்கு, 3 முதல் 7 ஆண்டுகள் வரை பல்வேறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.