பழைய கார், பைக்-ஐ எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவது ஈசி.. எவ்வளவு செலவாகும் தெரியுமா..?!

இந்தியாவில் தற்போது இரு வகையான ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு பிரிவு எலக்ட்ரிக் வாகனங்கள் தான் வாங்க வேண்டும் என்று புதிய கார், பைக்குகளை வாங்க வேண்டும் என்று காத்திருக்கும் கூட்டம், மறுபுறம் எலக்ட்ரிக் கார், பைக் வாங்குவதில் ஆர்வம் இருந்தாலும் அதன் விலை அதிகமாக இருப்பதால் வாங்க முடியாமல் தொடர்ந்து பழைய வாகனங்களையே பயன்படுத்தி வருபவர்கள்.

இவ்விரு பிரிவினரும் எல்க்ட்ரிக் வாகனங்களைப் பெற ஒரு வழி உண்டு, அதவும் குறிப்பாகக் குறைவான விலையில்.. எப்படி என்று தானே கேட்கிறீர்கள்.. வாருங்கள் சொல்கிறேன்.

இலங்கை பணவீக்கம் 54.6%, பாகிஸ்தானில் 21.3%.. அப்போ இந்தியா..? ரெடியா இருங்க மக்களே!!

கார், பைக்

கார், பைக்

நாடு முழுவதும் பல கோடி ICE இன்ஜின் கொண்ட இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் இருக்கும் வேளையில் குறுகிய காலத்தில் அனைத்து வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றி நெட் ஜீரோ இலக்கை அடைய முடியாது.

பழைய வாகனங்கள்

பழைய வாகனங்கள்

இந்தச் சூழ்நிலையில் தான் மத்திய அரசு எரிபொருள் அதிகம் பயன்படுத்தும் பழைய வாகனங்களின் இயக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தைக் கொண்டு வந்தது.

15 வருடம்

15 வருடம்

இத்திட்டத்தின் கீழ் 15 வருடத்திற்குப் பழமையான வாகனங்கள் அனைத்தையும் காய்லான் கடைக்கு அனுப்பிவிட்டு அதற்கான தொகையைக் கொடுப்பது தான், ஆனால் இத்திட்டம் பலருக்கு வசதியாக இல்லை என்பது மற்றொரு பிரச்சனை.

டெல்லி அரசு
 

டெல்லி அரசு

இதற்கிடையில் டெல்லி அரசு பழைய பெட்ரோல், டீசல் கார்களை எலக்ட்ரிக் கார்களாக மாற்றும் சென்டர்களை டெல்லியில் அமைக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துப் பதிவு செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது.

ரெட்ரோ பிட்டிங் சென்டர்

ரெட்ரோ பிட்டிங் சென்டர்

பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் பணிகளை அரசு அனுமதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சென்டர்கள் மட்டுமே அளிக்க வேண்டும் என்பது டெல்லி அரசின் திட்டம். டெல்லி அரசிடம் தற்போது 10க்கும் அதிகமான நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் ரெட்ரோ பிட்டிங் சென்டரை அமைக்கப் பதிவு செய்துள்ளது எனத் தெரிகிறது.

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறை

இந்தக் கட்டமைப்பு மூலம் 10 முதல் 15 வருட பழைய வாகனங்கள் அனைத்தும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற முடியும், இதனால் வாகனங்களை ஸ்கிராப் செய்யத் தேவையில்லை. இந்த ரெட்ரோ பிட்டிங் சென்டர் கட்டமைப்பும், அதன் தயாரிப்புகளும் வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் இது புதிய வர்த்தகமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

செலவு

செலவு

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு EV ரெட்ரோபிட்டிங் சேவை அளிக்கும் GOGOA1 நிறுவனத்தின் சிஇஓ கூறுகையில் இரு சக்கர வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்றால் 20000 முதல் 40000 ரூபாயும், 3 சக்கர வாகனங்கள் என்றால் 50000 ரூபாயும், 1000 சிசிக்கு அதிகமான கார்களுக்கு 2.5 லட்சம் ரூபாயும் செலவாகும் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

convert old bike and petrol diesel cars to electric vehicles how must it cost?

convert old bike and petrol diesel cars to electric vehicles how must it cost? பழைய கார், பைக்-ஐ எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவது ஈசி.. எவ்வளவு செலவாகும் தெரியுமா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.