சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் (89) பா.ஜ.க.வில் விரைவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், கடந்தாண்டு முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். சுமார் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அமரிந்தர் சிங், 8 மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த ஏப்ரல்-மே மாதம் நடந்த பஞ்சாப் தேர்தலில் இவரது கட்சி, பாஜக.வுடன் கூட்டணி அமைத்து போட்டி யிட்டது. பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட அமரிந்தர் சிங் டெபாசிட் இழந்தார்.
பஞ்சாப்பில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கியது முதல் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் விலகி பா.ஜ.வில் இணைந்தனர். அமரிந்தர் சிங்குக்கு தற்போது லண்டனில் முதுகு தண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரிடம் பிரதமர் மோடிகடந்த ஞாயிற்றுகிழமை நலம் விசாரித்தார். அவர் நாடு திரும்பியதும், பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் கட்சியை, பா.ஜ.க.வுடன் இணைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.