வார இறுதியில் பிரான்சுக்கு பயணிக்கும் எண்ணத்திலிருக்கும் பிரித்தானியர்களுக்கு பிரான்ஸ் தரப்பிலிருந்து ஒரு முக்கிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆம், பிரான்ஸ் விமான நிலையங்கள் பலவற்றில் பணியாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
பணவீக்கத்தை எதிகொளும் வகையில் ஊதிய உயர்வு அளிக்கவேண்டும் என்று கோரி விமான நிலைய பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
இந்த வேலைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கலாம் என தொழிலாளர் யூனியன்கள் தெரிவித்துள்ளன. ஆகவே, பிரான்சுக்கு பயணிக்கும் திட்டம் வைத்திருக்கும் பிரித்தானியர்கள் இடையூறுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.