பிரித்தானியர்கள் மீது அடுத்தடுத்து சுமத்தப்படும் கூலிப்படை குற்றசாட்டுகள்: ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை


ரஷ்ய படைகளால் உக்ரைனில் கைது செய்யப்பட்ட இரண்டு பிரித்தானியர்கள் மீது கூலிப்படை நடவடிக்கைகள் தொடர்பான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா போரில் பிரித்தானியாவின் இலாப நோக்கமற்ற அமைப்பான பிரசிடியம் நெட்வொர்க்கின் உதவிப் பணியாளராக டிலான் ஹீலி, (22) மற்றும் ஆண்ட்ரூ ஹில், (35) இருவரும் செயல்பட்டு கொண்டு இருந்த போது, உக்ரைனின் சபோரிஜியா நகரின் தெற்கே இருக்கும் சோதனைச் சாவடியில் ஒன்றில் ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்டனர்.

பிரித்தானியர்கள் மீது அடுத்தடுத்து சுமத்தப்படும் கூலிப்படை குற்றசாட்டுகள்: ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை | 2 British Man Charged Mercenary Activities Russia

பிரித்தானியர்கள் மீது அடுத்தடுத்து சுமத்தப்படும் கூலிப்படை குற்றசாட்டுகள்: ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை | 2 British Man Charged Mercenary Activities Russia

ரஷ்ய படைகளால் கூலிப்படை செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட டிலான் ஹீலி மற்றும் ஆண்ட்ரூ ஹில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒத்துழைக்க மறுப்பதாக மாஸ்கோ ஆதரவு டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் அதிகாரிகள் ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பிரித்தானியர்களின் குற்றங்களுக்கான ஆதாரங்களை டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் புலனாய்வு அதிகாரிகள் தேடுதல் விசாரணை நடத்தி வருவாதகவும் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு டொனெட்ஸ்க் மக்கள் குடியரசி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் செய்திகளுக்கு: இந்தியா, சீனாவை உள் இழுக்கும் நோட்டோ: ரஷ்யா கடும் எச்சரிக்கை!

பிரித்தானியர்கள் மீது அடுத்தடுத்து சுமத்தப்படும் கூலிப்படை குற்றசாட்டுகள்: ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை | 2 British Man Charged Mercenary Activities Russia

ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்டு மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய ராணுவ தன்னார்வலர்களான ஐடன் அஸ்லின் மற்றும் ஷான் பின்னர் ஆகியோரை தொடர்ந்து, டிலான் ஹீலி மற்றும் ஆண்ட்ரூ ஹில் ஆகியோர் மீது ரஷ்ய படைகள் கூலிப்படை குற்றசாட்டை சுமத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.