நேற்று முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த தடை காரணமாக குளிர்பானங்கள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து. பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களும் சிகரெட் பாக்கெட்டுக்களில் உள்ள பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் மாற்று வழியை தேர்வு செய்துள்ளது.
பிளாஸ்டிக் தடை
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது என்பதும் தடையை மீறி பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே.
பிளாஸ்டிக் பயன்பாடு நிறுத்தம்
இந்த தடை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக குளிர் பானங்கள் முதல் அனைத்து பொருட்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கும் பொருட்கள்
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக காகித ஸ்ட்ராக்களும், அதேபோல் மற்ற பொருட்களுக்கு மக்கும் தன்மையுடைய மாற்று பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சிகரெட் பாக்கெட்
அந்த வகையில் சிகரெட் பாக்கெட்டுகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடைக்கு முன்னதாகவே சிகரெட் தயாரிப்பாளர்கள் பிளாஸ்டிக் சிகரெட் பாக்கெட்டுகள் மேல் சுற்றப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்துள்ளனர்.
முழு ஒத்துழைப்பு
இதுகுறித்து இந்திய புகையிலை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பிளாஸ்டிக் தடையை வரவேற்பதாகவும், அரசின் இந்த அறிவிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள்
சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களான ITC, Godfrey Phillips India, VST Industries போன்ற நிறுவனங்கள் தற்போது ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை முழுவதுமாக பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளது என அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
மக்கும் பொருட்கள்
சிகரெட் பாக்கெட்டுக்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக தற்போது மக்கும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது சர்வதேச தர நிலைகளை கொண்டது என்றும் BIS தரநிலைகளுக்கு உட்பட்டது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைக்கு மாறானது அல்ல
தற்போது சிகரெட் பாக்கெட்டுக்களின் மேல் பயன்படுத்தப்படும் மக்கும் தன்மையுடைய பொருள் மண்ணுடன் தொடர்பு கொண்டது என்பதால் இந்த பொருள் எளிதில் மக்கிவிடும் என்றும் இயற்கைக்கு மாறானது அல்ல என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது இயற்கையாகவே குப்பைத் தொட்டிகளில் மக்கி விடும் என்றும் மறுசுழற்சிக்கு ஏற்றது என்றும் இந்திய புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய புகையிலை நிறுவனம்
சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் முழுமையாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வருவதால் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உரம் தயாரிப்பது தொடர்பான செலவை குறைக்கும் என்றும் இந்திய புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருங்கால சந்ததியினர்
இந்திய புகையிலை நிறுவனம் போலவே மற்ற அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டதால் வருங்கால சந்ததியினருக்கு ஒரு தூய்மையான பூமியை நாம் கொடுத்துவிட்டு சொல்லும் திருப்தி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Cigarette-Makers Moved To Environment… Ahead Of Plastic Ban
Cigarette-Makers Moved To Environment… Ahead Of Plastic Ban | பிளாஸ்டிக் தடை எதிரொலி.. சிகரெட் பாக்கெட்டுகளில் ஏற்பட்ட மாற்றம்!