நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவது முதல் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது வரை பல வழிகளில் முடிக்கு நன்மை பயக்கிறது.
நெல்லியில், வைட்டமின் சி மற்றும் டானின்கள் நிறைந்துள்ளன. இதன் ஊட்டமளிக்கும் பண்புகள் கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராக்கி, கூடுதல் மென்மையான அமைப்பைக் கொடுக்கும்.
நெல்லிக்காயை உணவில் வழக்கமான பகுதியாகச் சேர்த்த பிறகு, முடி அமைப்பில் தெரியும் மாற்றத்தை ஒருவர் அனுபவிக்க முடியும்.
தாதுக்கள், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் கூந்தலுக்கான சூப்பர்ஃபுட் ஆகும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் இரத்த சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. நெல்லியில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது, இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
நெல்லிக்காய் எண்ணெய் எப்படி செய்வது?
இந்த ஹேர் ஆயிலை, சேதமடைந்த முடி, சீக்கிரம் நரைத்தல் மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களும். பெண்களும் பயன்படுத்தலாம்.
செய்முறை
2 நெல்லிக்கனிகளை ஒவ்வொன்றும் 4 துண்டுகளாக வெட்டி, அவற்றை குறைந்தது 1 மணிநேரம் நிழலில் உலர வைக்கவும். நெல்லியின் காய்ந்த துண்டுகளுடன் 2 தேக்கரண்டி எள் எண்ணெய் (sesame oil) மற்றும் 4 தேக்கரண்டி எக்ஸ்ட்ரா வர்ஜின் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
அடுப்பில் இரும்பு கடாய் வைத்து, கலவையில் குமிழி வரும் வரை, மிதமான தீயில் சூடாக்கவும். வாணலியிலேயே ஆறவிடவும்.
இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றவும். சூரிய ஒளி படாதவாறு குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
இந்த ஹேர் ஆயில், முடி வளர்ச்சியைத் தூண்டவும், உச்சந்தலையை குளிர்விக்கவும், உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், கருமையாகவும் மாற்ற உதவுகிறது.
இப்படியும் யூஸ் பண்ணலாம்!
*தயிர் மற்றும் நெல்லிக்காய் பொடியை கலந்து ஒரு ஹேர் மாஸ்க்கை உச்சந்தலையில் தடவி, எப்போதும் போல கழுவவும். இது பொடுகு, அரிப்பு போன்ற பிற உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளிலிருந்து குணப்படுத்துகிறது.
*நெல்லிக்காயை எடுத்து பேஸ்ட்டாக அரைத்து சாறு பிழியவும். நெல்லிக்காய் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
இதை உச்சந்தலை மற்றும் முடியில், நன்றாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, லேசான ஷாம்பூவைக் கொண்டு, கண்டிஷனரைப் பயன்படுத்தி கழுவவும்.
அழகான கருகரு கூந்தலுக்கு கண்டிப்பா இந்த குறிப்புகளை டிரை பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“