மாணவிகளிடம் அத்துமீறல்.. காமுக தமிழ் வாத்திக்கு தவழ விட்டு தர்ம அடி..! பள்ளி வளாகத்தில் வைத்து உறிப்பு

கரூர் தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு தமிழ் வாத்தியார் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் மாணவியிடம் அத்துமீறியது அம்பலமானதால், அவரைப் பிடித்து உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பாகவதர் கால ஹேர்ஸ்டைலுடன் பஸ்டாண்டுவாசி போல காட்சி அளிக்கும் இவர்தான் வாட்ஸ் அப் தப்புத்தாளங்களால் தர்மஅடி வாங்கிய தமிழ் வாத்தியார் நிலவொளி..!

கரூர் மாவட்டம் சேங்கலை அடுத்து உள்ளது பாப்புரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நிலவொளி. கடந்த ஆண்டு ஆன்லைன் வகுப்பின் போதே தன்னிடம் படித்த மாணவிகளில் சிலரை மயக்கி வாட்ஸ் அப்பில் ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

அண்மையில் 10ம் வகுப்பு படித்து முடித்த மாணவி ஒருவர் வீட்டில் தமிழ் ஆசிரியர் செய்த அத்துமீறல் குறித்து தெரிவித்து கதறி அழுதுள்ளார். மாணவியின் செல்போனை வாங்கி பார்த்த போது அதில் தமிழ் ஆசிரியர் நிலவொளியின் வாட்ஸ் அப் எண்ணிலிருந்து வீடியோ கால் பேசியதும், சிறுமி சில வீடியோக்களை ஆசிரியருக்கு அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பள்ளிக்கு வந்து தமிழ் ஆசிரியரின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி மட்டுமல்லாமல் ஏராளமான மாணவிகள் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்கள், மாணவிகளுடன் ஆபாசமாக பேசிய வாட்ஸ் அப் மெசேஜ்கள் இருந்தை கண்டு ஆத்திரம் அடைந்து ஆசிரியர் நிலவொளியை அடித்து நொறுக்கி நையப்புடைத்தனர்

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாயனூர் போலீசார் சம்பவம் நடந்தது தங்கள் எல்லை கிடையாது என்றும் இதனை விசாரிக்க லாலாபேட்டை போலீசார் தான் வர வேண்டும் என்று கூறிச்சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் போலீசாரை கண்டித்து கரூர் – பஞ்சபட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியவர்களும், பெண்களும் திட்டித்தீர்க்க, ரத்த கண்ணீர் எம்.ஆர் ராதா பாணியில் தவழ்ந்து சென்ற தமிழ் வாத்தியை, சிறுவர்கள் செல்போனில் வீடியோ எடுக்க, இளைஞர்கள் கிடைத்த கேப்பில் எல்லாம் நிலவொளியை எட்டி மிதித்தனர்

நிலமை விபரீதமாவதை உணர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி பேருந்தை அனுப்பி வைத்த போலீசார், ஆசிரியரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்ல முற்பட்ட போது தனியார் பள்ளி நிர்வாகம், உரிய விளக்கம் தராத நிலையில் அவரை அழைத்துச்செல்லக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

5 மணி நேரம் கழித்து அங்கு வந்த லாலாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஒருவழியாக தமிழ் ஆசிரியரை மீட்டு தனது வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றார்.

பள்ளிக்கு கட்டணம் செலுத்தவில்லை என்றால் கடுமையாக பேசும் தனியார் பள்ளி நிர்வாகம் ஆசிரியரின் ஒழுங்கீனமான செயலுக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை எனவும் ஆசிரியரிடம் கைப்பற்றப்பட்ட செல்போனை ஆதாரமாக கொண்டு போலீசார் முறையாக விசாரித்தால் இந்த தமிழ் ஆசிரியர் எவ்வளவு பெண்கள், சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளான் என்பது தெரியவரும் எனவும் பெற்றோர் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.