மியன்மாருக்கு 6 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலையீட்டில் இந்த நன்கொடை நடைபெறும்.
காலாவதியாகும் தடுப்பூசி
இலங்கையில் கொள்வனவு செய்யப்பட்ட ஃபைசர் தடுப்பூசி மருந்துகளின் இருப்பு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் காலாவதியாகவுள்ளது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் , 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் வழங்குவதற்காகவும் 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
எனினும் 20 வயதுக்கு மேற்பட்டோரில் 54 வீதமானோரே இதுவரை மூன்றாவது டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதன் காரணமாக சுமார் எட்டுமில்லியன் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் மாதமளவில் காலாவதியாகும் நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஒமிக்ரோன் திரிபு
அத்துடன் ஒமிக்ரோன் திரிபின் உப திரிபுகள் சில உருவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் மக்கள் நான்காவது கோவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி, பிரதமருக்கு அரச புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அவசர எச்சரிக்கை |