மீண்டும் ஒன்றிணையும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி.?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர். 

கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். 

கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை அவமதிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நடந்து கொண்டனர். ஓபிஎஸ் மேடையில் அமர்ந்திருக்கும் போது அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவான பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். பொதுக்குழு ஒரு தலைப்பட்சமாக நடைபெறுவதாக கூறி ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். மேலும், கட்சி தலைமையை தக்க வைத்துக் கொள்ளவும், கட்சியில் தன் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கிலும் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னை வருகிறார். தனியார் ஓட்டல் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிகள், எம்எல்ஏக்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார். 

இந்த சிறப்பு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருமே கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் தலை தூக்கி உள்ள நிலை, அதிமுக பொது குழு கூட்டத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக ஒரே கூட்டத்தில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.