முகமது ஜுபைருக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு

அல்ட்நியூஸ் என்ற உண்மை கண்டறியும் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா விமர்சித்திருந்தார். இதையடுத்து, நாடு முழுவதிலும் சமூகவலைதளங்களை டெல்லி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தனர். இதில், ‘ஹனுமன்பக்தி’ என்ற பெயரில் பெங்களூரூவில் இருந்து செயல்படும் செய்தி இணையதளத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜுபைர், ட்விட்டரில் செய்த பதிவு சிக்கியதாகக் கூறி டெல்லி போலீஸார் அவரை விசாரணை அழைத்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கை டெல்லி போலீஸ் பதிவு செய்துள்ளது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கிரிமினல் சதி, சாட்சியங்களை அழித்தல், மற்றும் அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 35ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் முகமது ஜுபைரை 14 நாட்கள் விசாரணைக்கு எடுக்க டெல்லி போலீஸ் அனுமதி கோரியுள்ளது.

அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இனி முகமது ஜுபைரிடம் அமலாக்கப் பிரிவினரும் விசாரணைகள் மேற்கொள்ளலாம் எனத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.