முருங்கை-யில் கோடிகளை அள்ளும் கரூர் பெண்.. வெறும் 26 வயதில் கோடீஸ்வரி..!

எந்த ஒரு விஷயத்தையும் சரியான முறையிலும், சரியான நேரத்திலும் செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதற்குக் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபிகா முக்கிய உதாரணமாகத் திகழ்கிறார்.

இன்றைய இளம் தலைமுறையில் 9-6 வரையில் வேலையைக் காட்டிலும் முட்டி மோதினாலும் சொந்த தொழில், நிறுவனம், வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேவேளையில் எந்தத் துறையிலும் வெற்றி என்பது எளிதாகக் கிடைத்துவிடாது, அதிலும் குறிப்பாக விவசாயத் துறையில் மிகவும் கடினம். ஆனால் விவசாயத் துறையிலும் வெற்றிபெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, அதில் ஒன்றைத் தான் தீபிகா கையில் எடுத்துள்ளார்.

உங்கள் வாகனம் தொலைந்துவிட்டதா? சாவி இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா?

விவசாயம்

விவசாயம்

குழந்தையில் இருந்து தீபிகா தான் வசிக்கும் கிராமத்தில் விளைபொருட்களை விற்க போதுமான சந்தைகள் கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் பல சோதனைகள் மற்றும் இன்னல்களைப் பார்த்துள்ளார்.

விளைபொருட்கள்

விளைபொருட்கள்

தனது தந்தையும் விவசாயி என்பதால் விவசாயம், விளைபொருட்கள் அதன் வர்த்தகம் குறித்து அவரிடம் நிறையப் பேசியுள்ளதாகவும், அப்போது கரூர் பகுதியில் முருங்கை அதிகப்படியான விளைவது குறித்துத் தனது தந்தை கூறியுள்ளதாகவும் தீபிகா குறிப்பிடுகிறார்.

மதிப்பு கூட்டுப் பொருட்கள்

மதிப்பு கூட்டுப் பொருட்கள்

அப்படிப் பேசும் போதும் விவசாயத்தில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் மற்றும் அதன் மூலம் உருவாக்கும் வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் தீபிகாவிற்குத் தனது தந்தை விளக்கியுள்ளார். இதை அடி மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட நிலையில் படிப்பை முடித்ததும் விவசாயத்தைச் சார்ந்த வர்த்தகத்தில் இறங்குவது என முடிவு செய்தார்.

படிப்பு டூ பிஸ்னஸ்
 

படிப்பு டூ பிஸ்னஸ்

தீபிகா Actuarial Science பிரிவில் எம்எஸ்சி பட்டம் பெற்ற பின்னர்க் கரூர் பகுதியில் அதிகம் விளையும் முருங்கையில் அனைத்து விதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பது, அதை விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாமல் இருப்பதும் உணர்ந்துள்ளார்.

ரவி வேலுசாமி

ரவி வேலுசாமி

இதன் மூலம் முருங்கையை அடிப்படையாகக் கொண்டு மதிப்புக் கூட்டுப் பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்த தீபிகா, 2018ல் தனது தந்தை ரவி வேலுசாமி உடன் இணைந்து நிறுவனத்தைத் துவங்கி இன்று கோடிகளை அள்ளுகிறார் என்றால் மிகையில்லை.

GOOD LEAF நிறுவனம்

GOOD LEAF நிறுவனம்

தீபிகா தனது தந்தை உடன் இணைந்து GOOD LEAF என்ற நிறுவனத்தை உருவாகி, முருங்கையில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் உடன் பல்வேறு அழகு சார்ந்த பொருட்களைத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.

200 விவசாயிகள்

200 விவசாயிகள்

கரூர், திண்டுக்கல், வேலூர் எனப் பல பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான விவசாயிகளிடம் இருந்து முருங்கை சார்ந்த பல பொருட்களைக் கிலோவிற்கு 5 முதல் 100 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்து வருகிறார். இதுமட்டும் அல்லாமல் பல ஏக்கரில் முருங்கை விவசாயமும் செய்து வருகிறார்.

முக்கிய வர்த்தகப் பொருட்கள்

முக்கிய வர்த்தகப் பொருட்கள்

தீபிகாவின் GOOD LEAF நிறுவனம் தற்போது முருங்கை பவுடன், முருங்கை பாட் (POD), முருங்கை ரைஸ் மிக்ஸ், முருங்கை சட்னி பவுடர், முருங்கை டீ வரையிலும் அழகு சாதன பொருட்கள் பிரிவில் முருங்கை கேப்ஸ்யூல், சோப், பேஸ் ஸ்கிரப், ஹேர் ஆயில், ஹேர் சீரம் முதல் முருங்கை பேஸ் பேக்ஸ் எனப் பல பொருட்களைத் தயாரித்துள்ளார்.

முருங்கை ஹெர்பல் டீ

முருங்கை ஹெர்பல் டீ

தற்போது முருங்கை ஹெர்பல் டீ மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், பேஸ் பேக்ஸ் 250 முதல் முதல் 490 ரூபாய் வரையில் அதிகப்படியாக விற்பனை செய்யப்படுவதாகத் தீபிகா கூறியுள்ளார். GOOD LEAF பொருட்கள் தற்போது ரீடைல், ஆன்லைன் என அனைத்து வர்த்தகச் சந்தையிலும் விற்பனை செய்து வருகிறார் தீபிகா.

கோடி ரூபாய் வர்த்தகம்

கோடி ரூபாய் வர்த்தகம்

தீபிகாவின் GOOD LEAF நிறுவனத்தில் தனது தந்தையும் துணை நிறுவனராக இருக்கிறார். இந்நிறுவனத்திற்குக் கரூர்-ல் 10 பேர் பணியாற்றும் உற்பத்தி தளம் உள்ளது. இந்தக் கட்டமைப்பைக் கொண்டு தீபிகா கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Good Leaf Deepika Ravi: 26 yr old girl earns crores revenue in Superfood Moringa Products

Good Leaf Deepika Ravi: 26 yr old girl earns crores revenue in Superfood Moringa Products முருங்கை-யில் கோடிகளை அள்ளும் கரூர் பெண்.. வெறும் 26 வயதில் கோடீஸ்வரி..!

Story first published: Saturday, July 2, 2022, 18:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.