சென்னை: ரேபிஸ், பாம்புக் கடி மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபிஸ் (வெறி நாய்க்கடி) மற்றும் பாம்பு கடி மருந்துகள் தேவையான அளவு இல்லாமல் இருப்பது சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வின் போது தெரியவந்து. எனவே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரேபிஸ், பாம்பு கடி மருந்துகள் தேவையான இருப்பு வைக்க வேண்டும் என்று தமிழக பொதுக சுகாதாரத்துறை இயக்கனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரேபிஸ் தடுப்பு மருந்து 20 குப்பிகளும், பாம்பு கடி தடுப்பு மருந்து 10 குப்பிகளும் எப்போதும் இருப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டும். பொதுமக்களிடம் இது மருந்துகள் இல்லை என்ற புகார் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.