வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து.. 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு!

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து அதாவது NPA விகிதம் எப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து குறித்த விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி அளித்து வருகிறது.

ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!

இந்த நிலையில் 2022 வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து எப்போதும் இல்லாத வகையில் 5.9% குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளின் செயல்படாத சொத்து

வங்கிகளின் செயல்படாத சொத்து

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2022ஆம் ஆண்டு மார்ச் உடன் முடிவடைந்த நிதியாண்டில் வங்கிகளின் நிகர செயல்படாத சொத்துக்களின் விகிதம் 1.7 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் எப்போதும் இல்லாத வகையில் 6 ஆண்டுகளில் வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து விகிதம் 5.9% என உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

பணவீக்க அழுத்தங்கள், புவிசார் அரசியல் அபாயங்கள் ஆகியவை வருங்காலத்தில் கவனமாக கையாளப்பட வேண்டும் என்றும் இருப்பினும் பொருளாதாரம் தற்போது மீட்சி பாதையில் தான் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் போர்
 

உக்ரைன் போர்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போர் காரணமாக பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதாகவும் விநியோக சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் நிச்சயமற்ற தன்மையால் வளர்ச்சியானது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

வலுவான மூலதனம்

வலுவான மூலதனம்

ஆனால் அதே நேரத்தில் வணிக வங்கிகள் வலுவான மூலதனத்தை பெற்றுள்ளது என்றும் பாதகமான சூழ்நிலையிலும் கூட அனைத்து வங்கிகளும் குறைந்தபட்ச மூலதன தேவைகளை வைத்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரான வளர்ச்சி

சீரான வளர்ச்சி

மேலும் வங்கிக் கடன் வளர்ச்சி சீராக உயர்ந்து வருகிறது என்றும், ஏற்கனவே இரட்டை இலக்கங்களை எட்டியுள்ளது என்றும், வங்கிகள் மூலதனம் மற்றும் பணப்புழக்க நிலைகளை உயர்த்தியுள்ளதால் சொத்து தரம் மேம்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நிதி நிறுவனங்கள்

நிதி நிறுவனங்கள்

வங்கிகள் மட்டுமின்றி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) நல்ல மூலதனத்தை பெற்றுள்ளதாகவும், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டு வெளியேற்றம் மற்றும் அமெரிக்க டாலரின் கணிசமான உயர்வு ஆகியவற்றால் ஏற்ற இறக்கங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதால் சந்தை அபாயங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் ரிசர்வ் வக்கியின் அறிக்கை கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gross NPAs of banks fall to 6 year low of 5.9 percentage says Reserve Bank

Gross NPAs of banks fall to 6 year low of 5.9 percentage says Reserve Bank | வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து.. 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு!

Story first published: Saturday, July 2, 2022, 9:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.