வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சோமேட்டோ..!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ சமீபத்தில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய 4500 கோடி ரூபாய் அளவிலான தொகையை கொடுத்து BLINKIT நிறுவனத்தை கைப்பற்றியது.

இந்த கைப்பற்றல் சோமே்டோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி வாய்ப்புகளை அளித்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் மாறுப்பட்ட கோணத்தில் பார்க்கப்பட்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து சரிவை மட்டுமே எதிர்கொண்டது.

இந்த நிலையில் சோமேட்டோ டிவிட்டரில் போட்ட ஒரு பதிவு பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பழைய கார், பைக்-ஐ எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவது ஈசி.. எவ்வளவு செலவாகும் தெரியுமா..?!

சோமேட்டோ

சோமேட்டோ

சோமேட்டோ நிறுவனம் தனது டிவிட்டரில் 2022 ஆம் ஆண்டில் 6 மாதம் முடிந்த நிலையில், தனது பாலோவர்களிடம் 2022ஆம் ஆண்டின் முதல் 6 மாதம் ஒரு உணவாக இருந்தால் உங்களுடைய உணவு எதுவாக இருக்கும் என கேட்டது. இந்த ஒரு கேள்விக்கு இதுவரையில் சுமார் 1000 பேருக்கு அதிகமானர் பதில் அளித்துள்ளனர்.

பங்குகள் தான்

பங்குகள் தான்

சோமோட்டோ பங்குகள் தான் என சௌரப் பதில் அளித்துள்ளார், சோமேட்டோ பங்குகள் 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 60.38 சதவீதம் சரிந்துள்ளது. இதனை கிண்டல் செய்யும் விதமாக சோமேட்டோ நிறுவனத்தின் டிவிட்டர் கேள்விக்கு சோமேட்டோ ஸ்டாக்ஸ் கா பார்தா என டிவீட் செய்துள்ளார்.

சோமேட்டோ சூப்
 

சோமேட்டோ சூப்

இதேபோல் மற்றொருவர் சோமேட்டோ சூப் உடன் 60.7 சதவீத சரிவு என கிண்டல் செய்துள்ளார். ஸ்டார்ட்அப் சந்தையில் யார் முதலில் ஐபிஓ வெளியிடுவார் என எதிர்பார்த்து இருந்தோர் மத்தியில் சோமேட்டோ தனது இக்கட்டான நிதிநிலையில் ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய தொகையை முதலீடாக பெற்றாலும் சந்தை மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

கிண்டல்

கிண்டல்

இப்படி ஒருபக்கம் மக்கள் சோமேட்டோ-வை கலாய்த்துக் கொண்டு இருந்தாலும், அதிகப்படியானோர் சோமேட்டோவின் 2022ஆம் ஆண்டின் முதல் 6 மாதம் ஒரு உணவாக இருந்தால் உங்களுடைய உணவு எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு சீரியஸ் ஆக பதில் அளித்துள்ளனர்.

சீரியஸ் பதில்

சீரியஸ் பதில்

இதில் முக்கியமான பல பிரியாணியை குறிப்பிட்டு உள்ளனர். இதில் முக்கியமாக சோகமாக வெஜ் பிரியாணி என்றும், ஏலக்காய் அதிகமாக வந்த பிரியாணி, கரைந்த ஐஸ்கிரீம், பேன்டா மேக்கி என எக்கச்ச ஐடிங்களை அடிக்கியுள்ளனர். இதே கேள்வி பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடம் கேட்டால் எப்பிடி இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Zomato trolled on it twitter handle; if the first half of 2022 was a dish, what would it be? Netizens savage reply

Zomato trolled on it twitter handle; if the first half of 2022 was a dish, what would it be? Netizens savage reply வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட சோமேட்டோ..!

Story first published: Saturday, July 2, 2022, 14:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.