நேபாம் கேர்ள் (Napalm Girl) என்று அழைக்கப்படும் வியட்நாம் போரின் அடையாளமாக மாறிய பெண்ணக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி தோல் சிகிச்சை வழங்கப்பட்டது.
1972-ஆம் ஆண்டு வியட்நாம் போரின்போது, அமெரிக்கா அதன் ஸ்கைரைடர் தாக்குதல் விமானத்தின் மூலம் நேபாம் குண்டுகளை (Napalm Bomb) வீசப்பட்டபோது, ஒன்பது வயதான கிம் ஃபூக் ஃபான் தி (Kim Phuc Phan Thi) எனும் சிறுமி சாலையில் ஆடைகளின்றி, உடலில் தீக்காயங்களுடன் வேதனையில் அலறித் துடித்துக்கொண்டு ஓடும் புகைப்படம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது.
அந்த புகைப்படம் வியட்நாம் போரின்போது அடையாளமாக மாறியது மற்றும் அப்போர் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணமாகவும் மாறியது.
இதையும் படியுங்கள்: 2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!
சிறுமியை அங்கிருந்து சிகிச்சைக்காக அழித்துச் சென்ற புகைப்படக் கலைஞர், நிக் உட் (Nick Ut) எடுத்த இந்த புகைப்படம் அசோசியேட்டட் பிரஸ் புகைப்படக் கலைஞருக்கான புலிட்சர் பரிசை இந்தப் படம் வென்றது. இச்சம்பவம் சிறுமிக்கு “நேபாம் கேர்ள்” என்ற புனைப்பெயரையும் பெற்றுத் தந்தது.
இறுதியில் காயங்களில் இருந்து மீண்டு வியட்நாமில் 1992 வரை வாழ்ந்த கிம் ஃபூக் ஃபான் தி, தனது கணவருடன் கனடாவுக்குச் சென்றார். ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் வலியுடனும் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்துடன் வாழ்ந்தார்.
இதையும் படியுங்கள்: கனவில் கண்ட எண்கள்., லொட்டரியில் கோடிக்கணக்கான பணத்தை வென்ற நபர்!
இப்போது அவருக்கு 59 வயதாகிறது, மியாமி டெர்மட்டாலஜி மற்றும் லேசர் இன்ஸ்டிடியூட்டில் தனது 12வது மற்றும் இறுதிச் சுற்று லேசர் சிகிச்சையை செய்துள்ளார்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர் தனது உயிரைக் காப்பாற்றியதற்காக புகைப்படக் கலைஞரையும் சந்தித்தார்.
50 வருடங்கள் கழித்து, பலகட்ட சிகிச்சைகளை எடுத்துக் கொண்டபின், பான் தி கிம் பூஃக் “இனிமேல் நான் போரினால் பாதிக்கப்பட்டவள் அல்ல, நேபாம் பெண் அல்ல. இப்போது நான் ஒரு தோழி, உதவியாளர், பாட்டி… உயிர்பிழைத்தவளாக இப்போது நான் சமாதானத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று கூறினார்.
மேலும், எல்லோரும் அன்புடனும், நம்பிக்கையுடனும், மன்னிப்புடனும் வாழ வேண்டும் என்றும், அப்படி வாழக் கற்றுக் கொள்ள முடிந்தால், எங்களுக்குப் போர் தேவையில்லை என்றும் அவர் விரும்புவதாகக் கூறினார்.
‘Napalm girl’ Phan Thi Kim Phuc receives final burn treatment after 50 years
Phuc, pictured in 1972 running from napalm attack during Vietnam war, has final laser treatment in Miami, US#Vietnam #WWII
📸 pic.twitter.com/XD3hbfehsI— Mete Sohtaoğlu (@metesohtaoglu) July 2, 2022