சென்னை: ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஏ.எஸ்.ராஜன் பொறுப்பேற்றுள்ளார்.
1987-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தேனியைச் சேர்ந்த ஏ.சேர்மராஜன் என்ற ஏ.எஸ்.ராஜன், ஐபிஎஸ் அதிகாரியாக பிஹார் மாநிலத்தில் நியமிக்கப்பட்டார். இவரது பெற்றோர் எஸ்.கே.அய்யாச்சாமி மற்றும் ஏ.ரெத்தினம்மாள்.
பிஹார் மாநிலத்தின் ராஞ்சியில் முதன்முதலாக பயிற்சி எஸ்பியாக தனது பணியைத் தொடங்கிய ஏ.எஸ்.ராஜன் அதன்பிறகு ரோஹ்டாஸ் மாவட்டஎஸ்பியாக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு கடந்த 1999-ம் ஆண்டு மத்திய உளவுத் துறையில் இணைந்து சிறப்பு இயக்குநராக புதுடெல்லி, தமிழகம், குஜராத், லடாக் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், ஹைதராபாத் தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக ஏ.எஸ்.ராஜன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.