Nothing Ear (1): புதிய வடிவம் பெறும் நத்திங் இயர் (1) பட்ஸ் ஹெட்போன்!

Nothing Ear (1) Stick Leaks: ஜூலை மாதம் டெக் விரும்பிகளுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. பிரபல நிறுவனங்களின் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் வெளியாக தயாராக உள்ளன. இந்த சூழலில், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நத்திங் போன் (1) ஜூலை 12 அன்று வெளியாகிறது.

இதனுடன் நத்திங் இயர் (1) காம்போவாக வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நிறுவனம் புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, நத்திங் இயர் (1) ஸ்டிக் என்ற புதிய மாடல் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க|
Twitter Deal: எலான் மஸ்க் வசம் கூடுதல் தகவல்கள் – முடிவு எடுப்பதில் தாமதம் ஏன்?

இது தொடர்பான புகைப்படங்கள் அமேசான் தளத்தில் காணப்பட்டது. பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல், சிறிய மாறுதல்களுடன் இந்த இயர்பட்ஸ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நிறுவனம் வெளியிட்ட நத்திங் இயர் (1) பல சிறப்பம்சங்களைக் கொண்டு, நல்ல வரவேற்பைப் பெற்றது.

நத்திங் இயர் (1) ஸ்டிக் வடிவமைப்பு – NOTHING EAR (1) STICK Design

உண்மையில், இந்த ப்ளூடூத் ஹெட்செட் நத்திங் இயர் (1) போல தோற்றமளிக்கிறது. எனினும், இதன் சார்ஜிங் கேஸ் செவ்வக வடிவில் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதுவும், நேக்கட் வடிவமைப்பைக் கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க|
OnePlus Nord 2T 5G: ஒன்பிளஸ் நார்ட் 2டி 5ஜி போன் அறிமுகம் – வாங்கலாமா? விலை அம்சங்கள் என்ன…

இன்னும் எளிதாக பயனர்களுக்கு இதனை எடுத்துச்செல்ல முடியும். நிறுவனம் இதுவரை இதுகுறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. எனினும், நத்திங் போன் (1) உடல் இது வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

நத்திங் இயர் (1) அம்சங்கள் – Nothing Ear (1) Specification

இந்த தருணத்தில் நத்திங் இயர் (1) என்னென்ன அம்சங்களைக் கொண்டுள்ளது என்று பார்க்கலாம். 11.6mm டிரைவரை கொண்டிருக்கும் இயர் பட்ஸ், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) அம்சத்துடன் இருக்கிறது.

மேலும் படிக்க|
Telecom: 30 நாள்கள் வேலிடிட்டி தரும் BSNL மலிவு விலை திட்டங்கள் அறிமுகம்!

இதன் பேட்டரி ஆயுள் 34 மணிநேரமாக உள்ளது. ப்ளூடூத் 5.2, நேக்கட் டிசைன் என பல அம்சங்கள் கொண்டிருக்கும் இந்த இயர்பட்ஸின் விலை ரூ.5,999 ஆக உள்ளது. ஜூலை 12ஆம் தேதி நத்திங் போன் (1) வெளியாகும்போது, புதிய இயர்பட்ஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.