சென்னை: மிகச் சிறந்த ஆளுமைகளை கொண்டு “TN talk” என்ற தலைப்பில் ஆண்டுக்கு 25 நிகழ்வுகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இலக்கியம், பொருளாதாரம், கல்வி, தொல்லியம், மருத்துவம் அறிவியல் போன்ற பல துறைகளின் மிகச் சிறந்த ஆளுமைகளை கொண்டு “TN talk” என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசின் பொது நூலகத்துறை முடிவு செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு:
- அண்ணா நூற்றாண்டு நூலக ஒருங்கிணைப்பில் நவீன அரங்க அமைப்புடன் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
- ஆண்டுக்கு 25 நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- புகழ் பெற்ற கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும்.
- தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் இந்த நிகழ்வு நடைபெறும்.
- நிகழ்வுக்கான அமைவிடங்கள் நிகழ்வின் தன்மைக்கு ஏற்ற வகையில் இருக்கும்
- இதற்கான அட்டைவணை முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு சமூக வலைதளம் வாயிலாக பகிரப்படும்
- நிகழ்வுகள் அனைத்தும் இணையம் வழியாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
- முறையாக எடிட் செய்யப்பட்டு யூடியூப்பில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
- இந்தப் பணிகளை மேற்கொள்ள பொது நூலகத்துறை இயக்குநர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும்.