அமராவதி கொலை வழக்கு- என்ஐஏ விசாரணை

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மருந்துக் கடைக்காரரான உமேஷ் கோலே கடந்த மாதம் 21ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இர்பான் கான் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

முதலில் இது வழிப்பறிக் கொள்ளை தொடர்பான கொலை என்று கூறி வந்த போலீசார் தற்போது நுபுர் சர்மாவை ஆதரித்ததற்காக கொல்லப்பட்டப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

உதய்பூர் தையற்கலைஞர் கொலை வழக்குடன் அமராவதி கொலை வழக்கு விசாரணையும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.