பியூனோஸ் ஏர்ஸ்-அர்ஜென்டினாவில், டாலருக்கு நிகரான அந்நாட்டின் கரன்சியான, ‘பெசோ’வின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, அந்நாட்டு நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் அதிகாரப்பூர்வ கரன்சியான பெசோவின் மதிப்பு, டாலருக்கு எதிராக கடும் சரிவை சந்தித்துள்ளதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு தேவையான அமெரிக்க டாலரை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முறைசாரா சந்தையில், டாலருக்கு நிகரான மதிப்பு, 239 பெசோவாக குறைந்தது. இதனால், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து, லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நிலைமை கைமீறிப் போன நிலையில், அர்ஜென்டினாவின் நிதித்துறை அமைச்சர் மார்ட்டின் குஸ்மான், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
பியூனோஸ் ஏர்ஸ்-அர்ஜென்டினாவில், டாலருக்கு நிகரான அந்நாட்டின் கரன்சியான, ‘பெசோ’வின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, அந்நாட்டு நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.