பீகார் தலைநகர் பாட்னாவில், காவல்துறையினர் மீது கற்களை வீசியெறிந்து தாக்குதல் நடத்திய ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
பாட்னா மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கல்லெறிந்ததால், காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வெடிக்கச் செய்து அவர்களை விரட்டினர்.
கல்வீச்சில் பாட்னா காவல் கண்காணிப்பாளர் அம்பரீஷ் ராகுல் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.