கூடிய விரைவில் உங்கள் ஆன்லயன் ஸ்டேடஸை மறைக்கும் ஆப்ஷனை வாட்ஸ் ஆப் கொண்டு வர உள்ளது.
பல்லாயிரம் கோடி பேர் உலக அளவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டில் சில மணிநேரம் வாட்ஸ் ஆப் செயலிழந்ததுமே, அது எப்படிபட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. இந்நிலையில் வாட்ஸ் ஆப் தனது ஆப்ஷனில் சில மாற்றத்தை கொண்டி வர உள்ளது. சமீபத்தில் வாபீட்டா இன்போ வெளியிட்ட ஸ்கிரீன் ஷாட்டில் வாட்ஸ் ஆப் பயனர்கள் நீண்ட நாள் காத்திருந்த ஆப்ஷனை வாட்ஸ் ஆப் கொண்டுவர உள்ளது.
ஆன்லயன் இருக்கும் ஸ்டேடஸை வாட்ஸ் ஆப்பில் நீங்கள் வேண்டுமானால் மறைத்துகொள்ளலாம். நீங்கள் யாருக்கு உங்களது லாஸ்ட் சீனை காண்பிக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அவர்களுக்கு மட்டும் தெரியும்படி செய்ய முடியும்.
இதற்கு வாட்ஸ் ஆப் உங்களுக்கு ரெண்டு ஆப்ஷனை தருகிறது: ” EVERYONE” மற்றும்” same as last seen” என்ற ரெண்டு ஆப்ஷனை தருகிறது. நீங்கள் உங்களது கான்டாக்ட் லிஸ்டில் உள்ள நபர்கள் மட்டும் பார்க்கும்படியாக உங்கள் லாஸ்ட் சீனை வைக்க முடியும். இதனால் உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாதவர்கள் நீங்கள் ஆன்லயனில் இருப்பதும். உங்கள் ’last seen’ தெரியாது. இது முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே வாட்ஸ் ஆபில் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. கூடிய விரைவில் இது ஆண்டிராய்டு போன் வைத்திருப்பவர்களும் பயன்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“