ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவரைப் பிடித்த ஊர்மக்கள் அவர்களைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ரியாசி மாவட்டம் தக்சன் என்னுமிடத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளான பைசல் அகமது, தாலிப் உசைன் ஆகியோரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து இரண்டு ஏகே வகைத் துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, 7 கையெறி குண்டுகள், தோட்டாக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
ஊர்மக்களின் துணிச்சலைப் பாராட்டி ஆளுநர் மனோஜ் சின்கா 5 இலட்ச ரூபாயும், டிஜிபி 2 இலட்ச ரூபாயும் பரிசு அறிவித்துள்ளனர்.