இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!

பலருக்கும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையிருக்கும். ஆனால் அதற்கு முதல் தடையாக இருப்பது பணம். அடுத்தது என்ன தொழில் செய்வது? இது இரண்டும் இருந்தாலும், இது சரியாக வருமா? இந்த தொழிலை வெற்றிகரமாக செய்ய முடியுமா? என்ற சந்தேகம் இருக்கும். இதனை எண்ணியே பல வருடங்கலை வீணடித்திருக்கலாம்.

சரி எப்படியேனும் செய்யலாம் என திட்டமிடும் சமயத்தில் அதனை வேறொருவர் செய்ய ஆரம்பித்துவிடுவார்.

இதற்கெல்லாம் காரணம் பயம் என்றாலும்., வறுமையும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் ஏற்கனகே குடும்பம், பல்வேறு கஷ்டங்களில் இருக்கும் நிலையில் அதனை செய்யலாமா? வேண்டாமா? என்ற கேள்வி எழலாம். ஆனால் அந்த பயத்தினை உடைத்து என்னால் எதையும் செய்ய முடியும் என்று துணிந்தவர்களே இன்று தொழிலில் சாதித்தவர்களாக உள்ளனர்.

உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா.. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை பற்றி தெரிஞ்சுகோங்க!

பள்ளி செல்லும் முன் இட்லி விற்பனை

பள்ளி செல்லும் முன் இட்லி விற்பனை

அப்படி ஒரு சாதனை படைத்த பெண்மனி தான் தேன்மொழி. கரூரை சேர்ந்த தேன்மொழி வறுமையான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண். சிறு வயதிலேயே தந்தையை இழந்த தேன்மொழி, தனது பாட்டியுடன் ஈரோட்டில் வசித்து வருகிறார். பள்ளி கல்வி பருவத்திலேயே தான் பள்ளிக்கூடம் செல்லும் முன்பு, சைக்கிளில் சென்று பாட்டி கொடுத்த 300 இட்லி மற்றும் சாம்பாரை சைக்கிளில் வைத்து, ஈரோடு சந்தையில் கொண்டு சென்று விற்பனை செய்வது தான் இவரின் முக்கிய பணி.

வணிக விரிவாக்கம்

வணிக விரிவாக்கம்

ஆனால் இவ்வாறு வறுமை பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தேன்மொழி 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் குடும்[ப சூழ்நிலை காரணமாக அது முடியாமல் போனது. அதன் பிறகு தனது பாட்டியுடன் சேர்ந்த காலை இட்லி, மதியம் சாப்பாடும் சேர்த்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். எனினும் துளியும் மனம் தளராத தேன்மொழி, ஹோல்சேல் மருந்து நிறுவனத்தில் பணிபுரியவும் ஆரம்பித்துள்ளார். அப்போது அங்குள்ளவார்களால் கரஸில் பிகாம் படிப்பினையும் படிக்க ஆரம்பித்துள்ளார்.

திருமணம் வேண்டாம்
 

திருமணம் வேண்டாம்

ஒரு புறம் இட்லி விற்பனை, மருந்து விற்பனை, பிகாம் என பல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள வீட்டில் வற்புறுத்திய போது, தங்கைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக மறுத்து விட்டார். அதன் பிறகு தனது தாயிடம் வந்த தேன்மொழி, கரூரில் ஒரு டைல்ஸ் விற்பனை நிறுவனத்தில் பணிக்கு சேருகின்றார்.

விபத்தில் சிக்கிய தேன்மொழி

விபத்தில் சிக்கிய தேன்மொழி

அதன் பிறகு அங்கு வேலை பார்த்த முஜிபுர் ரஹ்மான் என்பவர் தனது காதலை சொல்ல, அதனை குடும்ப சூழல் காரணமாக மறுத்துள்ளார். ஆனால் விதி அத்தோடு விட்டு வைக்கவில்லை. யாரை மறுத்தாரோ அவரையே பின்னர் சந்திக்கிறார்.

இதற்கிடையில் ஒரு பேருந்து விபத்தில் தனது கால் உடைந்து பிளேட் வைக்கணும் என கூறப்பட்ட நிலையில், எண்ணெய் கட்டு போட்டு முடங்கியுள்ளார். ஆனால் அந்த காலகட்டத்திலும் காலே இல்லாவிட்டாலும் ரஷ்மான் தான் துணையாக இருப்பேன் என தேன்மொழிக்கு பக்கபலமாக நின்றுள்ளார்.

கடனாக வாங்கிய கணினி

கடனாக வாங்கிய கணினி

அதன் பின்னர் கால் சரியானதும் கடனாக கம்ப்யூட்டர் வாங்கிய தேன்மொழி, அதனை கத்துக் கொண்டு டேட்டா பில்லிங் ஜாப் மூலம் முதல் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்,. மாதங்கள் கடக்க கடக்க பல பெண்களுக்கும் ஆதரவளிக்க தொடங்கியுள்ளார். ஆனால் விதி மீண்டும் விளையாட பட்ட காலிலேயே மீண்டும் அடி. எனினும் அதிலும் தளராது எழுந்து ஓடிய தேன்மொழி, இன்று பல பெண்களுக்கு ரோல் மாடல்.

பல பெண்களுக்கு பணி வாய்ப்பு

பல பெண்களுக்கு பணி வாய்ப்பு

இன்று தேன்மொழியிடம் பல பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். சுமார் 300 பெண்கள் தேன் மொழியிடம் பணிபுரிந்து வருகின்றனர். தனக்கு கல்லூரி அனுபவம் இல்லாத தேன்மொழி, இன்று பல கல்லூரிகளுக்கு சென்று கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பணியமர்த்தி வருகின்றார். எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 5000 பெண்களுக்காகவது பணி வாய்ப்பினை கொடுக்கணும் என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக யாரையும் நிதி ரீதியாக சார்ந்திருக்க கூடாது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் தேன்மொழி.

லட்சங்களில் வருமானம்

லட்சங்களில் வருமானம்

சிறுவயதில் தந்தையை இழந்து, கால் உடைந்து, கல்லூரிக்கு செல்ல முடியாமை, குடும்ப வறுமை, என பல சவால்களை எதிர்த்து போராடிய தேன் மொழி, இன்று jobworldsolution என்ற நிறுவனத்தின் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகின்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Idli seller earns in lakhs today: Thenmozhi’s success journey

Idli seller earns in lakhs today: Thenmozhi’s success journey/இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!

Story first published: Sunday, July 3, 2022, 19:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.