மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்களை அணி திரட்டிய அக்கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
அலரது தலைமையிலான அரசு மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நாளை (ஜூலை 4) நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. இதற்கு முன்பாக, புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கரும், சிவசேனா சார்பில் ராஜன் சால்வியும் போட்டியிட்டனர். இருவரில் ராகுலுக்கு 164 வாக்குகளும், ராஜனுக்கு 107 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து 57 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக ராகுல் நர்வேக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம், மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமின்றி, இந்திய அளவில் குறைந்த வயத்தில் (45) சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளவர் என்ற பெருமையை ராகுல் நர்வேக்கர் பெறுகிறார்.