உதய்பூர் டெய்லர் கொலையாளிகளின் மொபைல்போன் தகவல்கள் ஆய்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி:ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவரை தலை, துண்டித்து கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டவர்களின் ‘மொபைல்போன்’களில் பதிவாகிஉள்ள தகவல்களை முழு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

latest tamil news

‘வீடியோ’

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்னையா லால், சமீபத்தில் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இதை, ‘வீடியோ’வாக பதிவு செய்து, கொலையாளிகள் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.முஸ்லிம் மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த பா.ஜ., முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுாபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், கன்னையா லாலைக் கொலை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
வீடியோவில் உள்ள ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். இவர்களுக்கு உதவியதாக, மோஷின், ஆசிப் என்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து, நான்கு பேரின் மொபைல்போன்களை முழுமையாக ஆய்வு செய்ய, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

latest tamil news

இணையதளம்

ஐ.பி.டி.ஆர்., எனப்படும் இணைய விபர பதிவுகள் பரிசோதனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் அவர்கள் எந்தெந்த இணையதளங்களை பார்த்தனர்; யார் யாருடன் தொடர்பு கொண்டனர்; பகிர்ந்த தகவல்கள் என, அனைத்தையும் சேகரிக்க முடியும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.