உதகை கல்லட்டி மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்தில் நெல்லையைச் சேர்ந்த மென்பொறியாளர் உயிரிழந்தார்.
சென்னை சோலிங்கநள்ளூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொறியியல் நிறுவனத்தைச் சேர்ந்த 18 பேர் உதகையை சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். அப்போது உதகையை சுற்றிப் பார்த்து விட்ட கல்லட்டி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்குவதற்காக நேற்றிரவு சென்றுள்ளனர்.
அப்போது 15-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வேன் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துமாரி என்ற இளம்பெண் பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து படுகாயமடைந்த அனைவரும் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர்.
கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் வாகனங்கள் செல்ல தடையுள்ளதால், இதனை கவனிப்பதற்காகவே அங்கு காவல் சோதனைச் சாவடி உள்ளது, இந் நிலையில் பெரிய வேனை இந்த மலைப்பாதையில் தடையை மீறி செல்ல அனுமதித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM