கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிற்கும், சென்னைக்கும் இடையேயான நேரடி விமான சேவை இன்று துவங்கப்பட்டது.
இந்தியாவில், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் சென்னையில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் எத்தியோபியாவிற்கான நேரடி விமான சேவை துவங்கப்பட்டது.