நமது வீட்டு சமையலறையில், கொத்தமல்லி விதை இருக்கும். இதை நாம் குறைத்து மதிப்பிடுவோம். உணவுகளில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் கொத்தமல்லி விதையை நாம் பயன்படுத்துகிறோம். கொத்தமல்லி விதையில் வைட்டமின் சி, ஏ, கே உள்ளது. சமீபத்தில் கோவிட் 19 தொற்று தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில், கொத்தமல்லி விதைகளை சேர்த்த சுடு தண்ணீரை பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
கொத்தமல்லி விதை தண்ணீரின் பயன்கள்
மூட்டு வலி உள்பட வாதம் ஏற்படாமல் தடுக்கும். உடலில் உள்ள நீர் இருப்பை தக்கவைக்கும். சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை நீக்கும். உடல் சூடாவதை தணிக்கும். முகம் வீங்குவதை தடுக்கும்.
கொத்தமல்லித் தண்ணீர் செய்முறை
1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை தண்ணீரில் போட்டு, அது பாதியாகும் வரை கொத்தவைக்கவும். பாதி அளவிற்கு வந்ததும், வடிகட்டி குடிக்கவும்.
நீங்கள் சிறுநீரக பிரச்சனையால பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரின் வழிகாட்டுதலுடன் கொத்தமல்லி தண்ணீரை குடிக்கவும்.