வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி பாஜக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்நிகழச்சியில், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழிச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில்,
இப்போது வந்து நேரடி பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தயார் என்று கூறுவதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
விடிய விடிய நீதிமன்றம் சென்று ஒரு உத்தரவைப் பெற்றது யார்?
உயர் நீதிமன்றம் சென்று 23 தீர்மானங்களுக்கு மேல், வேறு எது குறித்தும் விவாதிக்கக் கூடாது என்ற உத்தரவை பெற்றது யார்?
இப்படியாக கழகத்தின் தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டு, எல்லாவற்றுக்கும் காரணமாக ஓபிஎஸ் இருந்துவிட்டு, இப்போது வந்து பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறுவது என்பது, கழக தொண்டர்களை ஏமாற்றுகிற செயலாகத்தான் பார்க்கமுடியும்.
கழகத்தில் யாராக இருந்தாலும் பொதுக்குழுவுக்கு கட்டுப்பட்டவர்கள் தான். பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதி முடிவு. கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் தலைமையிலான தலைமைக்கழக கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் ஓபிஎஸ் வரவில்லை.
வரும் 11-ம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ்.,க்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.