கடன் தொல்லையால் குடும்பத்தினரை கொன்று கேரளா ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை| Dinamalar

திருவனந்தபுரம்-கேரளாவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கடனில் தவித்த நிலையில், ஊராட்சி அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால், குடும்பத்தினரை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

கேரளாவின் திருவனந்தபுரம் அருகேயுள்ள கல்லம்பலத்தில் வசித்தவர் மணி குட்டன்,46. அதே ஊரில் ஹோட்டல் நடத்திய இவருக்கு சந்தியா, 36, என்ற மனைவியும், 13 மற்றும் 19 வயதில் மகள், மகன் இருந்தனர்.மணியின் அத்தை தேவகி, 85, என்பவரும் இவர்களுடனேயே வசித்தார். நேற்று காலை இவர்களுடைய வீடு நீண்ட நேரமாக திறக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது, மணி குட்டன் துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.

முன்னதாக மற்ற நால்வருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தார் என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. சமீபத்தில் இவருடைய ஹோட்டலில் ஆய்வு நடத்திய ஊராட்சி அதிகாரிகள், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துஉள்ளனர். இதையடுத்து ஹோட்டலை பூட்டிய மணி, கடும் மன உளைச்சலில் தவித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு சில லட்சங்கள் கடன் இருந்ததால், இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.