தொடர்ந்து பெய்யும் கன மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கவும், அருவிக்கு செல்லவும் மாவட்ட வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அருவியல் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM