தென் சீனக் கடலின் மத்தியப் பகுதியில் உருவான சாபா புயல், சீனாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்த நிலையில், அங்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்து வீசிய சூறாவளி காற்றால் பல மாகாணங்களில் பலத்த மழை பெய்தது. ஹைனானில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த மழையால், சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மோசமான வானிலையால் ஹைகோ-சன்யா நகரங்களுக்கிடையான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டன.